Thursday, October 16, 2014

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயரின் நிர்வாண படங்கள் அடங்கிய காணொளி வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி உள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார்.

சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயரின் நிர்வாண படங்கள் வாட்ஸ்–அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் சரிதா நாயர் நிர்வாணமாக நிற்பதும், உடை மாற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதை அறிந்த சரிதா நாயர் அதிர்ச்சி அடைந்தாலும், அந்த காணொளி காட்சிகளில் இடம்பெற்றிருப்பது நான் தான் என்பதை ஒப்புக்கொண்டதோடு அந்த காட்சிகளை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று பத்தனம் திட்டாவில் உள்ள முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் தனது ஆபாச காட்சிகளை வாட்ஸ்–அப் மற்றும் இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்திய நபர்களை கண்டுபிடித்து தகவல், ஒளிபரப்பு வரைமுறை சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

சரிதாநாயரின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பத்தனம்திட்டா பொலிசார் சரிதாநாயரின் ஆபாச படங்களை பரப்பியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதுபற்றி சரிதாநாயர் கூறுகையில், எனது நிர்வாண படங்களை வெளியிட்டதன் பின்னணியில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் சதி இருக்கிறது.

அவர்கள் என்னிடம் பலமுறை கைப்பேசியில் மிரட்டல் விடுத்து வந்தனர். சில அரசியல் பிரமுகர்களின் படங்களை நான் வெளியிட வேண்டும் என வற்புறுத்தினர்.

மேலும், மறுத்தால் என்னை பற்றிய மேலும் படங்களை வெளியிடுவதாக மிரட்டினர் என்றும் இந்த பிரச்சினையை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer