Thursday, October 2, 2014

தமிழில் குறிஞ்சி மலர், முத்தாரம், திருமதி செல்வம் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ரிந்தியா இப்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் ரீமேக் ஆகும். "தமிழில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தேன். எனக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசை.

திடீரென்று வில்லியாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. அதனால் மலையாள சீரியலுக்கு வந்து விட்டேன். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. தமிழில் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில தமிழுக்கு திரும்பி விடுவேன்" என்கிறார் ரிந்தியா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer