Thursday, July 31, 2014

’கயல்’ திரைப்படத்தைப் பற்றி பிரபு சாலமன் :

டிசம்பர்  26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது. சொத்து, உறவுகள், உடமைகளை தொலைத்தவர்களுக்கிடையே தொலைந்து போன ஒரு காதல் தான் ’கயல்’. நம்மை கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு! நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு! அதை பதிவு செய்வதில் கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது.

எதை பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியப் படுவோம். நம் வீட்டிற்குள் 340  சேனல்கள் வருகிறது பெண்கள் சமயலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள்.இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த சின்ன சைஸ் பெட்டிக்குள் உலகம் நம் முன்னே வந்து விடுகிறது. அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டி உள்ளது.

முழு காமெடியுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கை தான் சுகமானதாக அமையும் என்கிற மையக்கரு தான் காமெடியுடன் சொல்லப் படுகிறது. கடைசி அரைமணி நேரம் யாருமே எதிர் பார்க்காத திருப்பம் இருக்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer