Sunday, July 27, 2014

எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக்அப் செய்து புகைப்படம் எடுத்து இளம்பெண் ஒருவர் அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் திகதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் பயணிகளிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டன்ட்ஸ்க் பகுதியை சேர்ந்த எகாத்ரினா என்ற பெண், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து திருடப்பட்ட நீல மஸ்கராவை கொண்டு தன்னை அழகு படுத்தி புகைப்படம் எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது அனைவரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer