Wednesday, July 30, 2014

கத்தி திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் ஹீரோவுக்கும் வில்லனுக்குமிடையே நடைபெறும் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது வழக்கமான படங்களைப் போலவே கத்தி திரைப்படத்திலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்துகிறார் முருகதாஸ். பாலிவுட்டின் வில்லனான நெயில் நிதின் முகேஷ் தான் விஜய்யின் வில்லன்.

கத்தி படத்தில் நடிப்பது குறித்து பேசிய நெயில் நிதின் முகேஷ் “நான் வில்லனாக நடித்தாலும், ரசிகர்களை கவரவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் எனது தோற்றத்தை மிகவும் ஸ்டைலாக காட்டியுள்ள என் ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி கூற வேண்டும். கோலிவுட்டின் முன்னணி நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், இங்கு வந்து இயக்குனர் சொல்வதை மட்டும் செய்துவிட்டு போக எனக்கு விருப்பமில்லை. பேசும் வசனங்களை புரிந்துகொண்டு சரியான உணர்ச்சியை முகத்தில் காட்டி நடிப்பவன் தான் நடிகன். அதனால் எனக்கான வசனங்களை துணை இயக்குனர்களிடம் கேட்டு உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொண்டு கண்ணாடி முன்பு நின்று பேசி பயிற்சி எடுத்த பின்பு நடித்தேன். நான் சரியாக பேசி நடித்ததைப் பார்த்த விஜய் அதிர்ந்துவிட்டார். எப்படி இவ்வளவு சரியாக நடிக்கிறீர்கள் என்று முருகதாஸும் ஆச்சர்யப்பட்டார்” என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer