Tuesday, July 29, 2014

வடிவேலு, விவேக் என காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சோனா. ‘கனிமொழி’ என்ற படத்தை தயாரித்து பெரும் நஷ்டத்திற்கு ஆளானார் சோனா. மீண்டும் படத்தயாரிப்பு வேலைகளில் இருந்து வந்தார். பல புதிய இயக்குனர்களிடம் கதைகளையும் கேட்டு வந்தார். இப்போது இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரதிலும் நடிக்க இருக்கிறார் சோனா.

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 'ஆமையும் முயலும்' என்ற மலையாள படத்தில் சோனா நடிக்கிறார். இதுவரை கிளாமர் வேடங்களில் நடித்து வந்த சோனா, தான் நடிக்கும் அடுத்த படத்தில் முழு நீள கதாபத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் மலையாள மொழியில் உருவாக உள்ளது.  இப்படத்தினை மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ப்ரியதர்ஷன் இயக்குகிறார். கதை கேட்டு, அதில் அவருடைய கேரக்டர் பிடித்துப்போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.கே.ஹரிதாஸ் இயக்கத்தில் ”திலீப் விவாஹிதனயாள்” என்ற படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 18, 2014 முதல் தொடங்குகிறது.

ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜித்தன் - 2’. ஏற்கனவே ஹிட்டான ‘ஜித்தன்’ படத்தை இயக்கிய வின்செண்ட் செல்வா கதை, திரைக்கதை, எழுத இயக்குனர் ராகுல் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் சோனா, விரைவில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் படத்திலும் நடிக்கவுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer