Tuesday, July 29, 2014

நெஸ் வாடியாவை நடிகை பரீத்தி ஜிந்தா கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று தொழிலதிபர் ஒருவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழிலதிபருமான நெஸ் வாடியா மீது கடந்த யூன் மாதம் பரபரப்பு மானபங்க புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பை மெரின் டிரைவ் பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நெஸ் வாடியா மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இரு தரப்பு சாட்சிகளிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நெஸ் வாடியா தரப்பு சாட்சியான தொழிலதிபர் சவன் தரு என்பவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு, சம்பவத்தன்று கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பிரீத்தி ஜிந்தா அருகில் நெஸ் வாடியா வந்தார். அப்போது அவர்கள் இருவரும் ஏதோ பேசி கொண்டு இருந்தனர்.

கிரிக்கெட் மைதானத்தில் அதிக ஆரவாரம் இருந்ததால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று அருகில் இருந்த எனக்கு கேட்கவில்லை. பின்னர் நெஸ் வாடியா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது அவரை பார்த்து நடிகை பிரீத்தி ஜிந்தா சத்தம் போட்டு கத்தினார். மேலும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer