Tuesday, July 29, 2014

மாத விடாயால் ஏற்படும் வயிற்று வலியால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஜீஜியான்ங் மாகாணத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் மருத்துமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரை ஸ்கேன் செய்து பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆண் மற்றும் பெண்ணின் இனபெருக்க உறுப்புகள் இரண்டுமே இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்றும் இந்நபருக்கு வயதாகிவிட்டதால் இனி எந்தவித சிகிச்சையும் அளிக்கமுடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த நபருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer