Wednesday, July 30, 2014

தீவிர அரசியலில் இருந்து குஷ்பு விலகிவிட்டாலும் அவரால் சும்மா இருக்க முடியாதில்லையா?

மீண்டும் சினிமா மீது ஆசை வந்திருக்கிறது. ஆனால் ஒரு திருத்தம். இந்த ஆசை நடிகையாகவதற்கு அல்ல, தயாரிப்பாளராக புதிய உத்வேகம் எடுப்பதற்கு! அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு அது இல்லை என்று முடிவானதும் சிவகார்த்திகேயனை கமிட் பண்ணியிருப்பதாக தகவல் பரவிக் கிடக்கிறது கோடம்பாக்கத்தில்.

அந்த ஒரு படம் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம். சிறு பட்ஜெட்டில் தரமான படங்களை எடுப்பதுதான் அவரது நோக்கம் என்கிறார்கள். எதிர்கால உத்தரவாதம் கொண்ட இளம் ஹீரோக்களும், இளம் இயக்குனர்களும் குஷ்புவின் குட் லிஸ்ட்டில் இடம் பிடிக்க ஆலாய் பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நினைத்தபடி எல்லாம் நடந்தால், குஷ்புவை கோடம்பாக்கத்தின் கோல்டன் டெம்ப்பிள் என்றே கொண்டாடலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer