Tuesday, July 29, 2014

பாசமலர், தென்றல் தொடர்களில் நடித்து வரும் டயானா விடியும் வரை பேசு, ஒக்கேனக்கல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, பெரிய திரையில் பிசியாக நடித்தாலும் தன் படிப்பையும் விடாமல் தொடர்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக டி.விக்கு அறிமுகமானேன். அதாவது ஒரு வயதில் இருந்து நடிக்கிறேன். இப்போது 17 வயதாகிறது. இதுவரை படித்துக் கொண்டேதான் நடித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும் நல்ல மார்க் எடுத்து விட்டேன். அந்த தைரியத்தில் இப்போது பிளஸ்& 2 படித்துக் கொண்டே நடிக்கிறேன். நடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் படிப்புதான். பத்தாம் வகுப்பு போலவே பிளஸ்-2விலும் நல்ல மார்க் எடுப்பேன் என்று நம்புகிறேன். ஒரு டிகிரி வாங்கி விட வேண்டும் என்பதே எனது லட்சியம். என்கிறார் டயானா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer