Thursday, July 31, 2014

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ஓட்டங்களையும், இந்தியா 330 ஓட்டங்களையும் எடுத்தன. பதிலுக்கு இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகவேகமாக துடுப்பெடுத்தாடி 4 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 445 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. நேற்று ஆட்டம் நிறைவுக்கு வரும் முன் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களை எடுத்திருந்தது. களத்தில் ராஹேன், ரோகித் ஷர்மா ஆகியோர் ஆட்டமிழக்காது நிற்கின்றனர். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்தியா இன்னமும் 333 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி பெற முடியும். அல்லது போட்டியை சமநிலைப் படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்தின் திறமையான பந்துவீச்சின் முன்னாள் இந்தியா இப்போட்டியில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer