Sunday, July 27, 2014

தெற்கு ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று விமான படை தலைவர் விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.ஐ.ஜி-29 என்ற அந்த போர் விமானம் அங்குள்ள அஸ்ட்ராகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வகை போர் விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில முறையும் இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. தற்போது நடந்த விபத்தால் ரஷ்ய விமானப்படையினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொழில்நுட்ப குறைபாட்டால் இவ்விபத்து நடைபெற்றதா? என்ன நடந்தது என்று குறித்து விசாரித்து வருவதாக கூறிய ஜெனரல் விக்டர் போண்டரேவ், முதற்கட்ட தகவலின் படி விமான போக்குவரத்து உபகரணம் பழுதானதால் இவ்விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

1980 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவ்விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கூட சைபீரியாவில் இந்த ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

சமீப காலமாக உலகின் சில பகுதிகளில் விமான விபத்துக்கள் நடந்து வருகின்றன. உக்ரைன் மீது பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தினர். இந்த நிலையில் ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer