Sunday, July 27, 2014

இங்கிலாந்தை வீழ்த்தி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி, டோனிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது எப்படி என்று கங்குலி, அணித்தலைவர் டோனிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றில் கங்குலி எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போதே டோனி இதனைக் கற்றுக் கொண்டிருப்பார்.

ஜொகான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். ஏறக்குறைய அந்த டெஸ்ட் போட்டியையே வென்றிருப்பார்.

லார்ட்ஸ் டெஸ்டில் குக் நாணய சுழற்சியில் வென்று இந்தியாவை களமிறங்க அழைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதே போல் டோனியும் டாஸ் வென்றிருந்தால் இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட சொல்லியிருப்பார்.

அயல்நாடுகளில் பவுலர்களுக்குச் சாதகமான பிட்சில் முதலில் துடுப்பெடுத்தாடி நெருக்கடிகளை சமாளித்து விட்டால் எதிரணியினருக்கு அதன் பிறகு நெருக்கடி கொடுக்கலாம்.

ஆகவே எப்போதும் முதலில் துடுப்பாட்டம் செய்வதே சிறந்தது. இந்த வழியில்தான் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி சாத்தியம்.

முதல் நாளில் ரிஸ்க் எடுத்தால் அதன் பலனை 4ஆம் நாள் 5ஆம் நாள் ஆட்டத்தில் அனுபவிக்கலாம். லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியில் அதுதான் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer