Wednesday, July 30, 2014

நாஞ்சில் அன்பழகன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சந்திராயன் ராக்கெட் விட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வந்ததுதான் இன்டஸ்ட்ரிக்கே வியப்பு. கோட் சூட் சகிதம் வந்த அண்ணாத்துரையை தடபுடலாக வரவேற்றது படக்குழு.

 அதுமட்டுமல்ல, தனக்கு முன்பாக லைவ் டான்ஸ் ஆடப்பட்டது அவருக்கே கூட புது அனுபவமாக இருந்திருக்கும்.

இவ்வளவு சிறப்பான விழாவில் படத்தின் நாயகி மோனிஷா கலந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நாவல் இலக்கியங்கள் அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிக்கிற மோனிஷா ஏன் வரவில்லை? இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இஸ்லாமியராகவும் மாறிவிட்டார். இனி சினிமா விழாக்கள் வேண்டாமே என்று நினைத்திருக்கலாம். அவர் வராவிட்டால் என்ன? அவரை தொப்பலாக நனையவிட்ட பாடல் காட்சியை திரையிட்டார்கள்.

அவ்வளவு ஏசியிலும் குப்பென்று வியர்த்தது வந்திருந்தவர்களுக்கு!

0 comments :

Post a Comment

 
Toggle Footer