Tuesday, July 29, 2014

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைப்பதற்கு, மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி, பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறு வாழ்வு மையம் அமைப்பதுக் குறித்து மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது. இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நிதியமைச்சகம் மறுவாழ்வு மையம் அமைப்பதுக்க் குறித்த பரிந்துரையை மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் முதல்கட்டமாக 600 இடங்களில் 477 கோடி ரூபாய் செலவில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer