Sunday, July 27, 2014

முன்னணி வார இதழ் சார்பில் விஜய்க்கு கொடுக்கப்படும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுக் கொள்ள நேரில் மதுரைக்கு வரப்போகிறார் விஜய்.

அவர் மட்டும் வந்தால் போதுமா? திரையுலகம் திரள வேண்டாமா? விஜய் பார்க்கதான் மூடி டைப்பே ஒழிய, திரையுலகத்தில் பல ஹீரோக்களுடன் நல்ல ரேப்போ வைத்திருக்கவும் செய்கிறார். இந்த அன்பை அடிப்படையாக கொண்டு மதுரைக்கு கிளம்ப நினைத்தார்களாம் அவர்களும். ஆனால், அவர்களை பெயர் தெரியாத பூதங்கள் சில எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.

‘ஆளுங்கட்சிக்கு பிடிக்காத ஹீரோ விஜய். போனீங்கன்னா பிரச்சனை வரும். அப்புறம் உங்க இஷ்டம்’ என்று அந்த பூதங்கள், வேதங்கள் ஓத... மதுரைக்கு டிக்கெட் போட்டால், நம்ம மார்க்கெட்டுக்கே டிக்கெட் போட்ருவாங்க போலிருக்கே என்கிற பலத்த குழப்பத்தில் தவிக்கிறார்கள் ஹீரோக்கள்.

ஆம்பல்னு நினைச்சு முகர்றதா? சாம்பல்னு நினைச்சு புரள்றதா? தெரியாம முழிக்குது பெரும் கூட்டம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer