Tuesday, July 29, 2014

அமலாபாலிடம்தான் எவ்வளவு மாற்றம்? சமீபத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ஹிட்டுக்காக தனது திரையுலக நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்தார் தனுஷ்.

அதில் கலந்து கொள்ள அமலாபாலும் சென்றிருக்கிறார். அங்கு ஆண் பெண் என்று கூடி கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த படத்தின் ஹீரோவான அமலாவையும் ஒரு கை பிடித்து அமர்கள ஏரியாவுக்குள் இழுத்துக் கொள்ள எவ்வளவோ முயற்சி நடந்தும், கூலாக நோ சொல்லிவிட்டாராம் இவர்.

அதே நேரத்தில் அங்கு நடக்கும் சம்பாஷணைகளையெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தாராம். ‘எவ்வளவுதான் கலகலப்பான பொண்ணா இருந்தாலும், குடும்பம்னு வந்துட்டா பொறுப்பும் வந்திருது. இது இந்திய பெண்களுக்கேயுரிய பக்குவம்’ என்று அந்த களேபரத்தில் கண் சொக்கி வந்த ஒருவர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இப்போதும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer