Wednesday, July 30, 2014

மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ், கெய்கர் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் '8MM' .இதை மலேசியாவில் பல படங்கள் இயக்கியுள்ள அமின் இயக்கியுள்ளார். நாயகனாக நிர்மல், புதுமுகம் திவ்யா,  பிரபல மலேசிய நடிகர் சிவபாலன், காந்திநாதன், நாராயண மூர்த்தி, விஜி, ஷியாம், மருது, தியாகா, கேசவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தியா, மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

'8MM' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில்  '8எம் எம்' படத்தின் தயாரிப்பாளர் ஜெயராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘சினிமா மீது எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. வேறு தொழில் வேறு வேலை என்றிருந்தோம். அப்படிப்பட்ட எனக்கு அமின் நட்புகிடைத்தது. அவர் சொன்ன கதை பிடித்திருந்தது. இந்தக் காலக் கட்டத்துக்கு ஏற்ற கதை. அவர்  பல டெலிபிலிம்ஸ் மலேசியாவில் எடுத்தவர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று  பல பகுதிகளில் நடந்திருக்கிறது. மலேசியாவிலும் நடந்திருக்கிறது. பொதுவாக மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வந்தால்  அங்குள்ள இரட்டை கோபுரம், ஹைவே, பார்க் என்றுதான் எடுப்பார்கள். நாங்கள் வட மலேசியா பகுதியைச் சேர்ந்தவர்கள். வடமலேசியா என்றால் வரலாற்றில் கடாரம் என்பார்கள். 10--11 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் அரசர்கள் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் தமிழர்கள் வியாபரரம் செய்த பகுதி அது. அந்தக் கடாரம் இன்று ஷண்டி எனப்படுகிறது. இது தான் எங்கள் குடும்பத்தின் பூர்வீகம்’ என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மலேசிய நடிகர் சிவபாலன் "இந்தப்படம் ஹாலிவுட் படம் போல அசத்தலாக இருக்கும். படத்தில் நான் 70 சதவீதம் வருவேன். ஹாலிவுட் படத்தில் பாடல் இருக்காது. இதில் பாடல்கள் இருக்கும். அதுதான் வித்தியாசம். இதில் அறிமுகமாகும் நாயகன் நிர்மலுக்கு இது முதல் படம். ஆனால் அனுபவத்தில் 10 வது படம் போல தெரிகிறது.'' என்றார்.

நாயகன் நிர்மமல் பேசும் போது "நான் ஒரு டாக்டர். டெண்டிஸ்ட்.புதுமுக நடிகர்களுக்கெல்லாம் கதை சொல்ல மாட்டார்கள் என்பார்கள். ஆனால் இயக்குநர் அமின் எனக்கு முழுக்கதையையும் அழகாக விவரித்தார். மலை, காடுகளில் விலங்குகள் வராத நேரத்தில் படமெடுத்தார்கள். அப்போது பயமாக இருந்தது.சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அடித்து சண்டை போட்டு காயமடைந்தோம்." என்றார்.

இயக்குநர் அமின் பேசும்போது, ‘தயாரிப்பாளர் ஜெயராதாகிருஷ்ணன் என் சொந்த சகோதரர்  மூத்த அண்ணன் போலாகி விட்டார். படத்திற்கு ஒளிப்பதிவு தரமாக இருக்க ரெட்  உள்பட பலவகை கேமராவைப் பயன்படுத்தி உள்ளோம்  ஒளிப்பதிவாளர் சக்திவேல் எங்களுடைய பட்ஜெட்டிலும் பிரமாண்டமான ஒளிப்பதிவு ரிசல்ட் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் முரளி சுப்ரமணி இசையில் பாடல்களில் பலரக இசையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னொரு  இசையமைப்பாளர் எல்.வி.கணேசனின் பின்னணி இசையில் புதுவிதமான பாணிகள் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஜோவியலாகப் பழகினார்; பணியாற்றினார். நாயகி திவ்யாவுக்கு இது முதல்படம் என்றே சொல்ல முடியாது’ என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer