Tuesday, July 29, 2014

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

காமன் வெல்த் போட்டியில் போட்டியில் வேலூரை சேர்ந்த சதீஷ் குமார் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளதோடு, 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளார். இதன் மூலம் காமன் வெல்த் போட்டியின் பதக்கப்பட்டியலில் 4 வது இடத்துக்கு இந்திய முன்னேறியுள்ளது.

இந்திய அணி 7 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 24 பதக்கங்களுடன் இந்தியா 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலாவது இடத்தில் அவுஸ்திரேலியா, இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து, மூன்றாவது இடத்தில் ஸ்காட்லாந்து ஆகியன உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer