Thursday, July 31, 2014

பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனிடமிருந்து விவாகரத்துக் கோரி மனு செய்துள்ள அவருடைய மனைவி சுகானே, ஜீவனாம்சமாக ரூ400 கோடியை கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிருத்திக் ரோஷன் - சுகானே தம்பதியினருக்கு இடையே கடந்த வருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக் கோரி மும்பை நீதிமன்றத்தை அனுகியிருந்தனர்.
விவாகரத்து வழக்கில் சுகானே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடியை ஜீவனாம்சமாக தரவேண்டும் எனவும், தனது இரண்டு மகன்களையும் தனது பராமரிப்பில் வைத்து வளர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இறுதி விசாரணை வரும் அக்டோபர் மாதம் 31ம் திகதி தொடங்கவுள்ளது. தற்போது மகன்கள் இருவரும் தாயின் பராமரிப்பிலேயே உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் சிறுவயது முதல் தன்னிடம் நட்பாக இருந்த சுகானேவை காதலித்து மணந்தார். கடந்த 2000ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. இருவருக்கும் ஹரிஹான், ஹரிதான் என இரு மகன்கள் உள்ளனர்.

ஹிருத்திக் ரோஷனின் மொத்தச் சுத்து மதிப்பு ரூ.1500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்படி கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களில் பாதியை மனைவி ஜீவாம்சமாக பெற முடியும் என்பதனால், சுகானேவின் இக்கோரிக்கைக்கு நீதிமன்றம் சிலவேளை தலைசாய்க்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer