Thursday, July 31, 2014

மேஷம்
சவால்களை சமாளிக்கும் நாள். விரதம் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு கைகொடுத்து உதவுவர். தாயின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

கடகம்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகளின் வழியே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும், பணிபுரியும் நாள். சமூகத்தில் பெயரும், புகழும் கூடும். கடிதம் மூலம் எதிர்பார்த்த நல்ல தகவலொன்று வந்து சேரலாம். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி
பயணங்கள் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விட்டு விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. குடும்ப பொறுப்புகள் கூடும். நண்பர்களுக்காக செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

துலாம்
விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சிடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சிலரின் அணுகுமுறைகளைக் கண்டு கோபமடைய நேரிடலாம். திட்டமிட்ட சில காரியங்கள் திடீர் பயணங்களால் திசை மாறிப் போகலாம்.

விருச்சகம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

தனுசு
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். செய்தொழில் மேன்மையும், உயர்வும் கிட்டும். குடும்பத்தினர்கள் உங்கள் சொற்கேட்டு நடக்க முன்வருவர். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

மகரம்
காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும் உருவாகும் நாள். வாங்கல் & கொடுக்கல்கள் ஒழுங்காகும. அரைகுறையாக நின்ற கட்டிட பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் உருவாகும்.

கும்பம்
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். நீங்கள் அதிகமாக நேசித்த ஒருவர் உங்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம். பிள்ளைகளின் வழியில் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

மீனம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

1 comments :

 
Toggle Footer