Wednesday, July 30, 2014

மேஷம்
வேலமுகத்தான் வழிபாட்டால் வெற்றிகள் வந்து சேரும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. நண்பகலில் பகையன்று நட்பாகலாம். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.

ரிஷபம்
ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகளால் குதூகலமான சூழ்நிலை அமையும்.

மிதுனம்
வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்
சொல்வாக்கைக் காப்பாற்றி செல்வாக்குப் பெறும் நாள். ஆதாயம் தரும் வேலையன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

சிம்மம்
சிறப்பான நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம்.

கன்னி
அம்பிகையையும், ஆனைமுகனையும் வழிபட்டு ஆனந்தம் காண வேண்டிய நாள். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். வெளியூர் பயணமொன்றால் கையிருப்பு கரையும் சூழ்நிலை அமையும்.

துலாம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை தோன்றி மறையும்.

விருச்சகம்
காதினிக்கும் செய்தி வந்து சேரக் கணபதியை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் ஏற்படும். பொது வாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சொத்துக்கள் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கைகூடும்.

மகரம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. எதிர்பார்த்தது போல் எதுவும் நடைபெறவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

கும்பம்
வரவும்&செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலனில் அக்கறை செல்லுத்துவீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

மீனம்
அம்பிகையையும், ஆனைமுகனையும் வழிபட்டு மகிழும் நாள். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முன்வருவீர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer