Monday, July 28, 2014

மேஷம்
பொன்னான நாள். பெற்றோர் வழியில் பெருமைகள் வந்து சேரலாம். உற்றார் உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள முன்வருவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.

கடகம்
பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துச் கொள்ள வேண்டிய நாள். புதிய திட்டங்களை யோசித்துச் செயல்படுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். குறைவாகப் பேசினாலும், குறை கூறி பேசாமல் இருப்பது நல்லது. எடுத்த காரியமொன்றை சோம்பல் காரணமாக நாளை செய்யலாம் என பாதியிலேயே விட்டுவிடுவீர்கள்.

கன்னி
மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். மனதிற்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டு. வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்.

துலாம்
கனவுகள் நனவாகும் நாள். காரியங்கள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும்.

விருச்சகம்
நினைத்தது நிறைவேறும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு
அம்பிகை வழிபாட்டால் இன்பங்களைக் காண வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

மகரம்
இனிய அனுபவங்கள் ஏற்படும் நாள். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உத்தியோக அனுகூலம் உண்டு.

கும்பம்
பணப் பற்றாக்குறை அகலும் நாள். வியாபாரம் தொழிலில் அதிக அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உணவு பழக்க வழக்கத்தில் சிறிது மாறுதல் செய்வீர்கள்.

மீனம்
தொட்டது துளிர்விடும் நாள். தொகை வரவுகள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer