Sunday, July 27, 2014

மேஷம்
நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. பண வரவு திருப்தி தரும்.

ரிஷபம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை அழகாக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும்.

மிதுனம்
பொருளாதார வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வளம் காண்பீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம்.

கடகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். சுற்றத்தாரால் கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். சுபவிரயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

சிம்மம்
எதிர்பாராத சந்திப்புகள் கிட்டும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும், நண்பர்கள் வழியிலும் சுப விரயங்கள் அதிகரிக்கும். ஆலய வழிபாடுகளில் நாட்டம் செல்லும்.

கன்னி
ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நாள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை அணிவதில் நாட்டம் செல்லும்.

துலாம்
மனதில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். குடும்பத்தில் பற்றும், பாசமும் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

விருச்சகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

தனுசு
வியக்கும் வாழ்வு அமைய விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். உத்தியோகம், தொழிலில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். நேற்று செய்யாமல் விட்ட வேலை ஒன்றை இன்று துரிதமாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அழகான பொருள் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். கடன் சுமைகளை குறைக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மீனம்
வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer