Saturday, July 26, 2014

மேஷம்
முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆச்சர்யப்பட வைக்கும்.

ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள. வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். மழலைச் செல்வங்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்
வரவும் & செலவும் சமமாகும் நாள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் அகல இறைவழிபாடு தேவை.

கடகம்
தீட்டிய திட்டங்கள் திசை மாறிச் செல்லும் நாள். இடமாற்றம், ஊர் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பிறருக்காக பொறுப்புச் சொல்வதை தவிர்ப்பது நல்லது. காகத்திற்கு உணவளிப்பது நல்லது.

சிம்மம்
ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள். வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. நூதனப் பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.

கன்னி
செல்வாக்கு மேலோங்கும் நாள். வெளிநாட்டு பயணம் பற்றிய வியக்கும் செய்தி வந்து சேரலாம். தொழில் ரீதியாக நீங்கள் யாரைச் சந்திக்க நினைத்தீர்களோ, அன்னதானங்களுக்காகச் செலவிடுவது நல்லது.

துலாம்
சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். வாங்கல்&கொடுக்கல்கள் ஒழுங்காகும். மற்றவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும்.

விருச்சகம்
முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. செலவிற்கேற்ற வரவுகள் வந்து சேரலாம். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

தனுசு
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். உற்றார், உறவினர்கள் வழியில் மனக்கசப்புகள் உருவாகலாம். சங்கீதப் பற்று மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.

மகரம்
மாற்றங்களால் ஏற்றங்களைக் காணும் நாள். மறக்கமுடியாத இனிய சம்பவமொன்று நடைபெறும். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

கும்பம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
வாகன யோகம் ஏற்படும் நாள். வளர்ச்சி பாதைக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer