Wednesday, July 30, 2014

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கில் இன்று காலை குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதி செய்த 10 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தஞ்சை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை  மாதம் 16ம் திகதி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் வெளிவர முடியாதபடி  பள்ளியின் கேட் பூட்டப்பட்டு இருஇந்ததால், குழந்தைகள் ஒன்றோடு ஒன்று கட்டிக்கொண்டு கதறியபடி கருகிப் போனார்கள்.

இவ்விபத்துக்கு காரணம் என்று 21 பேர் கைதான நிலையில், இதில் 11 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று வழக்கிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ள 10 பேர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட நிலையில், அவர்களுக்கான தண்டனை சற்று முன்னர் வெளியானது. அதன் படி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, 50 ரூபாய் அபராதம் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer