Sunday, June 29, 2014

பேஸ்புக்கில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட நடிகை அன்சிபாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அன்சிபா ஹாசன், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ள இவர்,
தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அன்சிபா தனது கவர்ச்சிப் படங்களை சமீபத்தில் இணையத்திலும், பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், பலர் இதை பாராட்டினாலும், ஒரு முஸ்லிம் பெண் இந்த மாதிரி கவர்ச்சி காட்டுவதா என்று சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், இப்படி கவர்ச்சி காட்டுவது மதக் கொள்கைக்கு விரோதமானது என்றும், இந்த செயலுக்காக கடவுள் முன் தண்டனை கிடைக்கும் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அன்சிபா, இந்த விடயத்தை காவல்துறைக்கு கொண்டு செல்ல யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer