Sunday, June 29, 2014

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் கேரக்டர் நடிகையாக ஆனவர் வித்யா. தமிழில் வள்ளி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்த சீரியல் தொடங்கி பல எபிசோட்களை தாண்டிய பிறகு இடையில் நுழைந்தாலும் தனது வில்லித்தனம் கலந்த கேரக்டரால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார் வித்யா.

WATCH VALLI SERIAL

தமிழ் சீரியலுக்கு வந்தது பற்றி அவர் கூறியதாவது: கேரள மாநிலம் கோட்டையம்தான் சொந்த ஊர். 8ம் வகுப்பு படிக்கும்போது விளம்பர படங்கள் மூலமாக கேமரா முன்னாடி நிற்க ஆரம்பிச்சேன். நடிப்பு, படிப்புன்னு கடந்தது வாழ்க்கை. தமிழ், மலையாளம் சேர்த்து 17 படங்கள் நடிச்சிருக்கேன். தமிழில் கடைசியாக நேரெதிர் என்ற படத்துல நடிச்சேன்.

வள்ளி வாய்ப்பு வந்தப்போ எந்த கேள்வியும் கேட்காம ஒத்துக்கிட்டேன். காரணம் தமிழ் சீரியல்ல நடிச்சா தமிழ் மக்களோட மனசுல சீக்கிரமே இடம் பிடித்திடலாம் என்பது எனக்குத் தெரியும். அதான் இடையில் கிடைத்த வாய்ப்பாக இருந்தாலும் தைரியமா ஒத்துக்கிட்டேன். குறுகிய காலத்துல மக்கள் மனசுல இடம்பிடித்தது சந்தோஷமாக இருக்கு. வள்ளி சீக்கிரம் முடிஞ்சிடும்னு சொல்றாங்க. அது கவலையாக இருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்கள் மனசுல நிக்கிற மாதிரி வாய்ப்புகள் அமையும்னு நம்புறேன். இனி தமிழ் சீரியல்கள்தான் என் உலகமுன்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறார் வித்யா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer