Friday, June 27, 2014

உலக கோப்பை நேற்றைய போட்டிகளில் ஜேர்மனி, அமெரிக்காவை 1-0 என வீழ்த்தியது. எனினும் இரு அணிகளும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

ஜேர்மனி இரண்டு வெற்றிகள், ஒரு சமநிலை ஆட்டம் என மொத்தம் 7 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. மறுமுனையில் அமெரிக்கா ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இருந்தது.  அதே நிலையில் போர்த்துக்கல் கானாவை 2-1 என வீழ்த்தி 4 புள்ளிகள் பெற்றிருந்தது. எனினும் புள்ளிகள் மற்றும் அதிக கோல்கள் அடித்த அணி எது என பார்க்கையில் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனால் போர்த்துக்கல், கானா அணிகள்  இம்முறை உலக கோப்பையிலிருந்து வெளியேறுகின்றன.

ஐரோப்பாவில், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்து வெளியேறும் இன்னுமொரு பலம்வாய்ந்த அணி போர்த்துக்கல் ஆகும்.  நேற்றைய போர்த்துக்கல், கானா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டத்தின் 21 வது நிமிடத்தில் கானாவின் ஜோன் போயே, போர்த்துக்கல் அணிக்காக கோல் ஒன்றை தவறுதலாக போட்டுக் கொடுத்தார். 57வது நிமிடத்தில் கானாவின் கயன் கோல் அடித்தார். 80 வது நிமிடத்தில் போர்த்துக்கலுக்காக கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் உலக கோப்பை கோல் அடித்தார். இது இலகுவாக அவருக்கு கிடைத்த கோல் வாய்ப்பாகும்.  இதேவேளை ஜேர்மனி - அமெரிக்கா இடையிலான ஆட்டத்தில் ஜேர்மனியின் முல்லர் தனது முதல் கோலை அடித்திருந்தார்.

இதேவேளை நேற்று அல்ஜீரியா - ரஷ்யா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி 1-1 என சமநிலை பெற்றது.  இதனால் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை ரஷ்யா இழந்ததுடன் அல்ஜீரியா அடுத்த சுற்றுக்கு நுழைகிறது. அதே போன்று கொரியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என கொரியாவை வீழ்த்தியிருந்தது. மேலும் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் பெல்ஜியம் அணியும் அடுத்த சுற்றுக்கு நுழைகிறது.

இரண்டாவது சுற்றில் அமெரிக்காவை - ஜேர்மனியும், பெல்ஜியத்தை - அல்ஜீரியாவும் எதிர்கொள்கின்றன.

இரண்டாம் சுற்றில் எந்தெந்த அணிகள் எவற்றுடன் மோதப் போகின்றன - படம்


0 comments :

Post a Comment

 
Toggle Footer