Monday, June 30, 2014

மேஷம்
நண்பர்களால் நல்ல தகவல் வந்து சேரும் நாள். தாய்வழி உறவினர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்களுக்காக பணத்தைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்
செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் இருந்த சச்சரவுகள் அகலும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம்
தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். பல நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்பொன்று வீடுதேடி வரலாம். பணப்பாற்றக்குறை தீர புதிய பணவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உருவாகும்.

கடகம்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கலாம். மருத்துவ செலவுகளைத் தவிர்க்க உடல் நலத்தில் கவனம் தேவை.

சிம்மம்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்கமான பணிகளில் திடீர் மாற்றங்களைச் செய்யும் சூழ்நிலை உருவாகும். சொந்தபந்தங்களால் தொல்லையுண்டு.

கன்னி
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். நாளை சந்திக்க நினைத்த ஒருவரை இன்றே சந்திக்கலாம். தொழில் முன்னேற்றத்திற்காக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

துலாம்
பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த பணவரவொன்று வந்து சேரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

விருச்சகம்
வருமானம் இரட்டிப்பாகும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். முன்னோர் சொத்துக்களில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். பொது வாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொடங்கிய சில வேலைகளைப் பாதியில் விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் சிலரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.

மகரம்
நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும் நாள். உறவினர்களின் வருகை உண்டு. உள்ளம் மகிழ உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். வரம் தரும் தெய்வங்களை வழிபடச் செய்வீர்கள்.

கும்பம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் சீராகும். புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.

மீனம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் செல்லும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer