திரையுலக பிரபலங்களை கேள்வி மேல் கேள்விகேட்டு DD திக்குமுக்காட வைக்கும்போதெல்லாம் ‘உங்களுக்கு எப்ப DD கல்யாணம்?’ என்று பிரபலங்கள் கேட்ட எதிர் கேள்வி தான் அது. அதுவும் மற்றொரு தொகுப்பாளினியான ரம்யாவிற்கு திருமணமான பிறகு இந்த கேள்வி அதிகமாக DD-யிடம் கேட்கப்பட்டது.
விளையாட்டுக்காக மட்டுமல்லாமல் உண்மையாகவும் DD-யின் திருமணத்தை திரையுலகினர் எதிரிபார்த்திருந்தனர். ஒரு வழியாக DD-யின் திருமண தகவலை, அவரே டுவிட்டரில் கூறிவிட்டார். தனது திருமணம் குறித்து டுவிட்டரில் DD ”ஒரு வழியாக என் நெருங்கிய நண்பனுடன் எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. கடந்த ஆறு வருடமாக என் நண்பனாக இருக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சாந்திரனுடன் எனக்கு ஜூன் 29-ஆம் தேதி திருமணம் செய்துவைப்பதாக எங்கள் இரு குடும்பமும் கலந்து பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு என்னை தயார்படுத்திக்கொள்ள இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. எல்லா பெண்களையும் போல எனக்கு பதட்டமாக இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுடன் என் திருமணம் சென்னையில் நடைபெறும்” என்றும் கூறியிருக்கிறார்.
DD- க்கு கணவராக வரப்போகும் ஸ்ரீகாந்த் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அசிஸ்டண்டாக பணிபுரிகிறாராம். கூடிய விரைவில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறாராம் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். தமிழ்த்திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் நெருங்கிய நெடுநாள் நண்பர்களையே திருமணம் செய்துகொள்வது தான் லேட்டஸ்ட் சினிமா டிரெண்ட்.
0 comments :
Post a Comment