Friday, May 30, 2014

அமெரிக்காவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் மின்சொஸ்டா மாநிலத்தில் தாரா என்ற 17 வயது பெண் வசித்து வந்தார்.

போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர் LSD என்ற ஒரு வித போதை மாத்திரையை தொடர்ந்து உட்கொண்டு வந்ததால் இறந்துள்ளார்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், 5 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

இதில் 3 பேர் 17 வயதும், மற்ற 2 பேர் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் ஆவர்.

இவர்களில் ஜான்சன், பெர்க், நேர்லாண்டர், மற்றும் மேட்னர் ஆகியோர் போதைப் பொருட்கள் வாங்கி விற்பாதாகவும், கலாடன் என்பவன் அவற்றை விநியோகம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இவர்கள் 5 பேர் மீதும் ஆபத்தான போதைப்பொருளை விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்த மாணவர்கள் தாங்கள் செய்வது தவறு என அறிந்தும் அதை துணிந்து செய்துள்ளனர் என்றும் இந்த பெண்ணின் மரணத்திற்காக இவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer