Friday, May 30, 2014

நடிகை ஸ்ருதிஹாசன் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் டேடிங்கில் இருக்கிறார் என்பது சமீப காலமாகவே பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது ரெய்னா - ஸ்ருதி ஜோடிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மூலம் இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஸ்ருதிஹாசனை ரெய்னா தனது அதிர்ஷ்ட தேவதையாக நினைத்தாலும், தங்கள் காதலை சீக்ரெட்டாக வைத்திருப்பதற்காகத் தான் அதிகமாக சந்திக்காமல் இருக்கிறாராம். ரெய்னா ஐபிஎல்-ல் பிஸியாக இருக்க, ஸ்ருதி படங்களில் படுபிஸியாக இருக்க நேரமே கிடைப்பதில்லையாம் இந்த காதல் ஜோடி சந்தித்துக்கொள்ள. ஆனாலும் எப்படியாவது நேரம் ஒதுக்கி ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்களாம் இவர்கள் இருவரும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer