Saturday, May 31, 2014

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது, இதனை அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை சார்பில் சங்ககரா 112 ஓட்டங்களும், டில்சான் 71ஓட்டங்களும், இங்கிலாந்து சார்பில் கர்ணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் எடுத்தன.

இங்கிலாந்து சார்பில் பட்லர் அதிரடியாக விளையாடி 74 பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்தார், போபாரா  51ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணியின் சார்பாக மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer