ஏற்கனவே மத்தியப் பிரதேச அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய ஆலோசித்து வரும் நிலையில், குஜராத் மாநில பள்ளிப்பாடத் திட்டத்தில் மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாகப் புகுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து குஜராத் மாநில கல்வியமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நரேந்திர மோடியின் பிறப்பு,அவரது குடும்பப்பின்னணி, பள்ளி நாட்கள், வாழக்கையின் பல்வேறுக் கட்டங்களில் அவர் எதிர்க்கொண்டப் போராட்டங்கள், இன்று அவர் பிரதமராக உயர்ந்திருப்பது என்று அவரது வாழ்க்கையின் பல்வேறு முக்கிய கட்டங்கள் அந்தப் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
5 வது மற்றும் 6, 7 வது வகுப்புக்களின் பாட நூல்களில் மோடியின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment