Friday, May 30, 2014

சின்னத்திரை வந்த காலத்திலிருந்து சீரியலுக்கென்ற தனி மவுசு ஏற்பட்டது. சித்தி, கோலங்கள், அத்திபூக்கள், மெட்டி ஒலி என பல தொடர்கள் சாதனை படைத்தது. மாமியார் மருமகள் சண்டை, இரண்டு மனைவி பிரச்னை, சொத்து பிரச்னை, ஈகோ பிரச்னையென குடும்ப பிரச்னைகளை கையில் எடுத்து கதைகள் உருவானது. அதை பார்த்தவர்கள் தங்கள் குடும்ப சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். சீரியல் முன் உட்கார்ந்து அழுவது சர்வசாதாரணமானது.

ஆனால் இப்போது இந்த குடும்ப அழுவாச்சி சீரியல்களுக்கும், கூட இருந்தே பழிவாங்கும் சீரியல்களுக்கும் மவுசு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. சீரியல்களின் ஆடியன்சான பெண்கள் இப்போது சீரியல்களிலும் பிரமாண்டத்தை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அழுது அழுது போராடித்து விட்டதாம். இதனால் பிரமாண்டமாக தயாராகும் சரித்திர சீரியல்கள் புராண சீரியல்களின் பக்கம் அவர்கள் கவனம் திரும்பி இருக்கிறது.

மகாபாரதம், ஜோதா அக்பர், ரோமாபுரிப் பாண்டியன், மன்னன் மகள், நாயன்மார்கள் தொடர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் முன்னணி சேனல்கள், பிரமாண்டமான சரத்திரம் மற்றும் புராண தொடர்களை தயாரித்து தர தயாராக இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களை தேடத் தொடங்கியுள்ளன். இன்னும் சில சேனல்கள் இந்தி சேனல்களில் ஒளிபரப்பான சரித்திரம் மற்றும் புராண சேனல்களில் ஒளிபரப்பு உரிமையை வாங்கி டப் செய்து வருகின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer