அவர் சொன்ன படம் ‘அன்பே சிவம்’. கமல் நடித்த அந்த படம் இப்பவும் பிலிம் பெஸ்டிவல்களில் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ்சினிமா என்றாலே ஹிந்தி படங்கள்தான் என்கிற உலகளாவிய சிந்தனையை அவ்வப்போது தகர்த்து வருவதே இது போன்ற கமல் படங்கள்தான்.
நிலைமை அப்படியிருக்க, சுந்தர்சி ஏன் இப்படி சொன்னார்? அதே பிரஸ்மீட்டில் கொக்கிப்பிடி போட்ட பிரஸ்சுக்கு, தன்னாலான விளக்கத்தை கொடுத்து சாந்தப்படுத்தினார் சுந்தர். ஆனால் இந்த விளக்கங்கள் மறைக்கப்பட்டு, அவரது புலம்பல்கள் மட்டுமே வெளியே வந்ததால் சுசி அப்செட். அதனால் நாமே அவரது விளக்கத்தை நாட்டுக்கு தெரிவித்து அவரை சுகப்படுத்துகிறோம் கர்த்தரே... வேறொன்றுமில்லை, அவர் சொன்ன பதிலின் மிச்சம் இது.
நான் வெளிநாடுகளுக்கு போகும்போது என்னை அறிமுகப்படுத்துகிறவர்கள், இவர்தான் அன்பே சிவம் டைரக்டர் என்கிறார்கள். அதற்கப்புறம் அவர்கள் கொடுக்கிற மரியாதையே தனியாக இருக்கிறது. பட்... அந்த வெற்று மரியாதையை வச்சுகிட்டு நான் என்ன பண்ணுறது? அந்த படத்தால் எனக்கு வர வேண்டிய சம்பளம் கூட வரலியே என்றார்.
இதற்கான பதில் கமலிடம் கூட இல்லையே?
0 comments :
Post a Comment