Saturday, May 31, 2014

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி மணிப்பூரின் இரும்பு பெண்மணியான ஐரோம் ஷர்மிளா 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவர் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இம்பால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், உணவு உட்கொள்ள மறுத்த அவர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். அவருக்கு மூக்கு வழியாக திரவ உணவு ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கி, தனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்று ஐரோம் ஷர்மிளா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“பாராளுமன்றத்தில் தங்களின் முயற்சியால் ஆயுதப்படை அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, நான் சுதந்திரமாக வெளியில் வரும் நாட்களை எண்ணுகிறேன். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த இருபது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோரை இந்திய அரசாங்கம் கொலை செய்துள்ளது.

ஏராளமான அப்பாவி மக்கள் காணாமல் போகச் செய்துள்ளது. எனவே, தயவு செய்து மனிதர் களுக்கான அடிப்படை உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும். அதனால் நாங்கள் சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வாழ முடியும்” என்று ஷர்மிளா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer