Saturday, May 31, 2014

மலேசியாவில் மரணமான இலங்கையர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளார்

மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 24ம் திகதி மலேசியாவில் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் விபதுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன்  என்பவரே வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் சுமார் 4 வருட காலமாக மலேசியாவில் தொழில் புரிந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று அவருடைய உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில்,

தனது கணவன் கடந்த ஒரு வருடத்துக்கு முதல் தான் அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் இலங்கை பணம் 8 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதற்க்கு பணம் தேவை, பணத்தை தனது கணக்குக்கு போடும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

அதன் படி மனைவியும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தரகர்கள் அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி இவரை ஏமாற்றி உள்ளனர்.

இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள்  ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தனக்கு கணவன் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்படுள்ளது என தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer