Saturday, May 31, 2014

அமலாபால் அவ்வளவு சீக்கிரம் தாலி கட்ட சம்மதிப்பார் அவரது குடும்பமே கூட நினைத்திருக்காது.

ஆனால் டைரக்டர் விஜய்யுடன் கை கோர்க்க நாள் குறித்துவிட்டார் அவர். இருந்தாலும் அவரது குடும்பம் முற்று முழுதாக சம்மதித்துவிட்டது. ஏன்? கல்யாணத்துக்கு பிறகும் நடிப்பேன் என்று அவர் முடிவெடுத்ததுதான். இதற்கு விஜய்யும் சம்மதித்திருக்கிறாராம். இதற்கிடையில் சினிமாவை கரைத்து குடித்திருக்கும் தம்பதிகள் இருவரும் சொந்தப்படம் எடுக்கிற ஐடியாவிலும் இருக்கிறார்களாம். எப்படியிருந்தாலும், கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகிற லிஸ்ட்டில் அமலா இல்லை என்பது மட்டும் ஆறுதல்.

நடுவில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பிரஸ்சை சந்தித்த தம்பதிகளிடம் ஏடா கூடமாக கேள்விகளை கேட்டு அவர்களை மேலும் வெட்கப்பட வைத்தார்கள் சில நிருபர்கள். சார்... ஜஸ்ட் பிரண்ட்லி சந்திப்புதான் இது. ரொம்ப கேள்வி கேட்டு என்னை ஓட வச்சுராதீங்க என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் விஜய்.

செட்டியாரும் சேச்சியும் இணையும் இந்த திருமண பந்தம் செட்டியார் விழா போலிருக்குமா, சேச்சிகள் ஸ்டைலில் இருக்குமா என்றெல்லாம் கேட்க நினைத்திருந்தவர்கள் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று ஆஃப்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer