Saturday, May 31, 2014

பஞ்சாப் - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னையை தோற்கடித்து முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ் அணி.

இதன் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மீண்டும் மோதுகிறது பஞ்சாப் அணி.

இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை எடுத்தது. விரேந்தர் ஷேவாக் அதிரடியாக 58 பந்துகளில் 122 ஓட்டங்களை எடுத்தார். இதில் 12 பவுன்றிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். டாவிட் மில்லர் 38 ஓட்டங்களை குவித்தார். விரேந்தர் ஷேவாக் இப்போட்டியின் மூலம் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார்.

பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. சுரேஷ் ரைனா அதிரடியாக 25 பந்துகளில் 87 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சித்தார். எனினும் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இன்றைய வெற்றியை அடுத்து பஞ்சாப் அணி முதன்முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer