Friday, May 30, 2014

சீனாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என கடந்த 1980ம் ஆண்டு முதல் ஒரு குடும்பதிற்கு ஒரு குழந்தை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.

கடந்த 34 ஆண்டுகளாய் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தால் தற்போது அங்கு இளைஞர்களின் பெருக்கம் குறைந்துவிட்டது.

குறிப்பாக பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்ததில் மணப் பெண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், அங்கு இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கவும், நாட்டில் மனித வள சக்தியை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ள சீனா அரசாங்கம், ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் தற்போது உள்ள மக்கள் தொகையை விட 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer