Thursday, May 29, 2014

சமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷாவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமென்று விஜய்க்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எலையில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவான மேஜரின் குழந்தையை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தார் விஜய்.

அர்ஷாவை விஜய் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அர்ஷாவின் படிப்புச் செலவை விஜய் ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வெளியாகத் துவங்கியது. இந்த தகவல் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்தவித விளக்கங்களும் வெளிவராத நிலையில் மேஜர் முகுந்த் சார்பில் இந்த தகவல் பொய் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேஜர் முகுந்தின் ஃபேஸ்புக் பகத்தில் “ அக்‌ஷரா விஜய் ரசிகை என்பதையறிந்து, விஜய் அக்‌ஷராவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார். ஒரு நாள் முழுவதும் விஜய்யுடன் இருந்த அக்‌ஷராவிற்கு அந்த நாள் மிகவிம் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. இதற்காக விஜய்க்கு மேஜர் முகுந்தின் குடும்பத்தினர் தங்களது நன்றியை தெரிவிதனர். விஜய் அக்‌ஷராவை வெளியில் அழைத்துச் சென்றாரே தவிர எவ்வித உதவியும் செய்தவதாக சொல்லவில்லை. முகுந்தின் குடும்பத்தினரும், முகுந்தின் பெயரால் எந்த உதவியும் பெறக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர். இந்த விளக்கம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer