Saturday, May 31, 2014

சென்னை தொலைக்காட்சியான பொதிகை தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கு ஒளிபரப்பாகும் திரைப்படப் பாடல்கள், சினிமா, குறும்படம், நெடுந்தொடர் எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது பொதிகைதான். எல்லா நிகழ்ச்சிகளையுமே பெரும்பாலும் பிற தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கியோ அல்லது நேரம் ஒதுக்கி (சிலாட்) கொடுத்தோதான் ஒளிபரப்பி வந்தது.

முதன் முறையாக சென்னை தொலைக்காட்சி ஒரு சீரியலை சொந்தமாக தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது. அதன் தலைப்பு வாழ்வே தாயம். மதன்பாப், பாண்டு, நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி, சுந்தர், கார்த்திக், பாபி ஆகியோரைக் கொண்ட காமெடி பட்டாளம் நடிக்கிறது. ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனாரவியின் தம்பி ரதீஸ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பொதிகையில் ஒளிபரப்பான பல தொடர்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

"இழு முழுநீள காமெடித் தொடர். பார்க்கிறவங்களை சிரிக்க வைக்கிறதுதான் நோக்கம். அதோடு ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயற்சி பண்ணியிருக்கோம்" என்கிறார் இயக்குனர் ரதீஸ். வருகிற 2ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer