Monday, May 26, 2014

என்னது சேந்துட்டாங்களா? என ஆச்சர்யப்பட்டது போல், அதுக்குள்ள பிரிஞ்சிட்டாங்களா? என தமிழ்த்திரையுலகம் சிம்பு-ஹன்ஸிகா காதல் முறிவு பற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தது. ஹன்ஸிகாவுடனான பிரிவுக்குப் பிறகு சிம்பு, நயன்தாராவுடன் சில பார்ட்டிகளில் கேமரா கண்களில் சிக்கினாலும் தற்போது வரை ஹன்ஸிகாவின் பிரிவை எண்ணி எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறார்.

ஹன்ஸிகாவுடன் ஜோடியாக சிம்பு நடிக்கும் வாலு திரைப்பட பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தாய்லாந்து நகரில் நடந்து முடிந்திருக்கிறது. காதலித்த சமயத்தில் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்குச் சென்றால், தன் காதலிக்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் தற்போது சிம்புவுக்கு காதலியே இல்லாததால் ‘காதலிக்கு எதுவுமே வாங்காமல் கடைகளை வெறித்துப் பார்த்தபடியே கடந்துவந்துவிட்டேன்’ என்று டுவிட்டரில் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer