Saturday, May 31, 2014

உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராகுல் காந்தி நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சகோதரிகளுக்கு 14, 16 வயது இருக்கும். அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 பொலிசார் உள்பட 7 பேர் கும்பல் 2 சகோதரிகளை கற்பழித்துகொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பொலிசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை படான் சென்றுள்ளார்.

மேலும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer