நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என முதன்முறையாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற பின், மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
எனவே, அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு பொலிசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றி எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment