Thursday, May 29, 2014

இன்று வியாழன் காலை கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் உக்ரைன் ஜெனரல் ஒருவர் உட்பட 14 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள ஸ்லோவ்யானஸ்க் நகர் அருகே தீவிரவாதிகள் இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியிருப்பதாக தற்காலிக ஜனாதிபதி ஒலெக்சான்ட்ர் டுர்சினோவ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இராணுவ சுழற்சிக்காக துருப்புக்களை ஏற்றிக் கொண்டு சென்ற குறித்த ஹெலிகாப்டர் ரஷ்யாவின் ராக்கெட் மூலம் செலுத்தப் படும் க்ரைனேட் லாஞ்சர் இன் மூலம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. மிகப் பெரியளவிலான உயிரிழப்புக்கள் உக்ரைன் இராணுவத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதால் கடந்த வாரம் இடம்பெற்ற அதிபர் தேர்தலை அடுத்து உக்ரைனில் வன்முறை அதிகரித்து வருகின்றது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் இராணுவத்தின் தாக்குதலில் திங்கட்கிழமை 33 ரஷ்ய குடிமக்கள் கொல்லப் பட்டதாக பிரிவினைவாதிகளின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் தனியாக சுதந்திரப் பிரகடனம் செய்திருந்த ஸ்லோவியான்ஸ்க் நகர மேயர் CNN ஊடகத்துக்குத் தகவல் தரும் போது திங்கட்கிழமையில் இருந்து காணாமற் போயிருந்த 4 ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் ரஷ்ய ஆதரவு போராளிகளால் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாகக் கூறியுள்ள அதே வேளை அவர்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தைத் தெரிவிக்க மறுத்து விட்டார். ஆயினும் புதன்கிழமை உக்ரைனின் வெளியுறவு அமைச்சு கருத்துத் தெரிவிக்கையில் OSCE அமைப்பைச் சேர்ந்த சுவிஸ், துருக்கி, எஸ்டோனிய மற்றும் டானிஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறித்த ஐரோப்பிய கண்காணிப்பாளர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer