Tuesday, April 22, 2014

தென்னிந்திய சினிமா மோகத்தை, லண்டனில் பரப்பி, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை திசை திருப்ப, கோடிக்கணக்கில் செலவுசெய்து ,நிகழ்வு ஒன்றை விஜய் TV லண்டனில் நடத்தியிருந்தது. இன் நிகழ்வை ஒரு தமிழ் இணையம் மட்டும் முதன்மை படுத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். பணத்திற்காக விளம்பரங்களை போட்டு, ஈழத் தமிழர்களை இவர்கள் ஏமாற்றியும் உள்ளர்கள். அதாவது நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள் என்று அறிவித்த சிலர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இது ஒருபுறம் இருக்க,

நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வின் ஊடக அணுசரணையை நாமே வழங்கி இருந்தோம் என்று லங்கா ஸ்ரீ இணையம் பலருக்கு தெரிவித்தது. ஆனால் நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக எதனையும் விஜய் TV மேடையில் அறிவிக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள், பங்கு பற்றக்கூடிய அரங்கில் சில நூறு மக்களே பிரசன்னமாகியிருந்தார்கள். இன் நிலையில், இன் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாக இந்த இணையம் செய்தியையும் படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். அதாவது மண்டபத்தில் அதி கூடிய ஆட்கள் எங்கே இருக்கிறார்களோ, அவர்கள் பக்கம் கமராவை திருப்பி போட்டோ எடுத்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள் என்று பணத்திற்காக செய்திகளை எழுதியுள்ளது இந்த இணையம்.

ஈழத் தமிழர்களின் பணத்தை அட்டைபோல உறிஞ்சி இழுக்க , இந்திய பண முதலைகள் முயற்சிசெய்து வருகிறார்கள். இதற்கு வெட்கம் கெட்ட வகையில் ஈழத் தமிழர்களின் செய்திகளை வெளியிட்டு வரும் இந்த இணையமும் துணைபோவது கவலைக்கு உரிய விடையம் ஆகும். ஈழத் தமிழர்கள் பலர் கலந்துகொள்ளாத இன் நிகழ்வு, மிகவும் பிரபல்யமாக நடந்தது என்று வெளியுலகத்திற்கு காட்ட ,இவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் உண்மையை மறைக்க முடியுமா ? இதோ ஆதாரப் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இது தவிர விஜய் TV, நடிகர் சிவ கார்திகேயன் மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் லண்டன் வருவதாக அறிவித்தது. இதனை நம்பி பல தமிழர்கள் இன் நிகழ்வுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் இவர்கள் இருவரும் வரவில்லை என்று தெரிந்ததும், தமிழர்கள் அதிருப்த்தி அடைந்துள்ளார்கள். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை திசை திருப்பவும், தென்னிந்திய சினிமா மோகத்தை லண்டனில் பரப்பவும், இதுபோன்ற நிகழ்வுகளை விஜய் TV அல்ல , மேலும் பல நிறுவனங்கள் நடத்தலாம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் நிச்சயம் நல்ல பாடத்தை புகட்டுவார்கள். அதுவே தற்போது நடந்து முடிந்துள்ளது.

விழுந்தாலும் மீசையில் மண் முட்ட வில்லை என்று, பேசும் ஒரு புல்லுருவி தமிழ் இணையம் இதுபோன்ற நிகழ்வுகளை தூக்கிப் பிடிக்கலாம். இறந்த உறவுகளின் , மரண அறிவித்தலை பணமாக்கி, பிணத்தின் மீது காசு சம்பாதிக்கும் இது போன்ற இணையங்களின் முகத்திரை கிழிக்கப்படும். தமிழ் இன உணர்வு ஓங்க நாம், ஒன்றாக பாடுபடுவோம் என ஈழத் தமிழர்களாகிய நாம் இனியாவது உறுதி பூண்டுகொள்வோம் ! புலம்பெயர் நாட்டில் தமிழர்களின் கோடிக்கணக்கான பணத்தை அபகரிக்க, இவ்வாறு இவர்கள் கழியாட்ட நிகழ்சிகளை நடத்துகிறார்களே ! ஆனால் இவர்கள் என்றாவது ஈழம் சென்று அங்கே உள்ள ஒரு ஈழத் தமிழனுக்காவது உதவிசெய்துள்ளார்களா ? ஆனால் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்களிடம் இருந்து காசை மட்டும் கொள்ளையடிக்க இவர்கள் அடிக்கடி லண்டன் வந்து செல்கிறார்கள். தமிழர்கள் என்ன அவ்வளவு அசடுகளாகவா இருக்கப்போகிறார்கள்?


athirvu.com

0 comments :

Post a Comment

 
Toggle Footer