Wednesday, April 23, 2014

ஒண்ணு படத்தை முடிங்க... இல்லேன்னா ஆளை விடுங்க என்று பாண்டிராஜுக்கு அதட்டல் போட ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்று கூடி கூடி விவாதித்ததில், நயன்தாரா பெஸ்ட் என்று கூறினாராம் சூர்யா.

என்னங்க... நடிக்கிறீங்களா? என்று நயன்தாராவிடம் கேட்கப்பட, சுமார் இரண்டு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, ‘சம்பளத்தில் கூட சலுகை தர்றேன். எனக்கு பரிபூரண சம்மதம்’ என்று கூறிவிட்டார். ஆனால் தேதிகளை தர வேண்டும் என்றால், கையிலிருக்கிற பட நிலவரம் தெரிந்தால்தானே? சிம்புவுடன் இவர் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ கிடப்பில் கிடக்கிறது. இதை முடித்துக் கொடுத்துவிட்டால் சூர்யா படத்திற்கு போய் விடலாம். அல்லது இந்த தேதிகள் போதும் என்று கூறிவிட்டால் கூட போதும். சிம்புவின் அலட்டலால் இவ்விரண்டையும் தெரிந்து கொள்ள முடியாமலே இருக்கிறார் நயன்தாரா. (படத்தின் இயக்குனரான பாண்டிராஜுக்கு மட்டும் தெரிந்து விடுமாக்கும்?)

சீக்கிரம் சொல்லலேன்னா நான் அந்த படத்துக்கு போயிருவேன். அதை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணணும். என்ன சொல்றீங்க? என்று நயன்தாரா கேட்கிற கேள்விக்கு யாரும் பதில் சொல்கிற நிலைமையில் இல்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer